தனக்கெதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டாலும் தோல்வியடைந்தாலும் தானே வெற்றியாளர் என தெரிவிக்கிறார் உதய கம்மன்பில.
பிரேரணை தோல்வியடைந்தால், அரசாங்கம் கூட்டாக எடுத்த முடிவை நடைமுறைக்குக் கொண்டு வந்த அமைச்சரோடு அரசு கை கோர்த்திருக்கிறது என்ற செய்தி நாட்டு மக்களைச் சென்றடையும் எனவும் பிரேரணை வென்றால், அரசாங்கமும் எதிர்க்கட்சியும் கூட்டாக இணைந்து தோற்கடித்த ஒரே அரசியல்வாதியென தான் வரலாற்றில் இடம்பிடிக்கப் போவதாகவும் அதுவும் பாரிய வெற்றியே எனவும் அவர் தெரிவிக்கிறார்.
இதேவேளை, எரிபொருள் விலையுயர்வுக்கு எதிராக விமர்சனம் வெளியிட்டு வந்த யாரும் இதுவரை அதற்கான மாற்றுத் தீர்வொன்றை தர வில்லையெனவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment