ஜனாதிபதியாகத் தயார்: அர்ஜுனவும் அறிவிப்பு! - sonakar.com

Post Top Ad

Monday 5 July 2021

ஜனாதிபதியாகத் தயார்: அர்ஜுனவும் அறிவிப்பு!

 


நாட்டின் தலைமைத்துவத்தை ஏற்று நடாத்தத் தாம் தயாராக இருப்பதாக தெரிவிக்கிறார் முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க.


2015ல் சோபித தேரர் தன்னையே பொது வேட்பாளராக இருக்கும் படி கேட்டுக்கொண்டதாகவும் அப்போது தாம் அதற்கு இணங்கவில்லையெனவும் தெரிவிக்கின்ற அவர், இப்போது தாம் நாட்டின் தலைமைத்துவத்தை ஏற்றுக் கொள்ளத் தயாராகி விட்டதாக தெரிவிக்கிறார்.


தமது தொடர் வளர்ச்சியினால் இலங்கையிலும் இம்ரான் கான் போன்று ஒருவர் உருவாகி விடுவார் என அரசியல்வாதிகள் அச்சம் கொண்டுள்ளதாகவும் அர்ஜுன தெரிவிக்கின்றமையும் தாமும் தயாராகி விட்டதாக அண்மையில் சம்பிக்க தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment