ரிசாத் வீட்டில் மண்ணெண்ணை பற்றி விசாரணை - sonakar.com

Post Top Ad

Wednesday 28 July 2021

ரிசாத் வீட்டில் மண்ணெண்ணை பற்றி விசாரணை

 


ரிசாத் பதியுதீன் வீட்டில் பணி புரிந்த யுவதி எரி காயங்களுக்குள்ளான சம்பவம் பற்றி தீவிரமாக விசாரித்து வரும் பொலிசார், அங்கு மண்ணெண்ணை கொண்டு வந்தது யார் என்பது தொடர்பில் விசாரித்து வருவதாகவும் தற்சமயம் தகவல்களில் குழப்பம் நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


முன்னதாக, சாரதியே மண்ணெண்ணை கொண்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும் தற்போது அதில் குழப்பம் நிலவுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எரி காயங்களுக்குள்ளான யுவதி தங்கியிருந்த இடத்தில் லைட்டர் ஒன்றும் கண்டறியப்பட்டிருந்த நிலையில் இவ்விவகாரம் தொடர்பில் தீவிரமாக விசாரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.


ரிசாத் பதியுதீன் வீட்டில் மண்ணெண்ணை மற்றும் லைட்டர் பாவிப்பதற்கான தேவை எதுவுமில்லையென அங்கு பணிபுரியும் மேலும் ஒருவர் வாக்குமூலம் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment