குடும்பத்தின் கடனை அடைப்பதற்காகவே வீட்டுப் பணிப்பெண்ணாக தமது மகள் சென்றதாகவும் அங்கு ரிசாதின் மனைவியோடு முறுகல் காரணமாக துன்புறுத்தப்பட்டதாகவும் ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார் ரிசாத் பதியுதீன் வீட்டில் தீக்காயங்களுக்குள்ளாகி இறந்த சிறுமியின் தாயார்.
தமது குழந்தை ஒரு போதும் தற்கொலை செய்யக் கூடியவரில்லையெனவும் யாரோ கொலைn சய்திருக்கிறார்கள் எனவும் தந்தை தெரிவிக்கிறார்.
பணியில் இணைந்த காலத்தில் ரிசாதின் மனைவியை எதிர்த்துப் பேசியதால் சர்ச்சைகள் உருவானதாகவும் தான் அடித்துத் துன்புறுத்தப்படுவதாக தனது மகள் தெரிவித்ததாகவும் தாயார் மேலும் தெரிவித்துள்ள நிலையில் இவ்விவகாரம் அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளதோடு ரிசாத் வீட்டு முன்பாகவும் மலையகத்திலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment