விவாதத்துக்கு முன் பதவி விலகுமாறு அழுத்தம் - sonakar.com

Post Top Ad

Tuesday 6 July 2021

விவாதத்துக்கு முன் பதவி விலகுமாறு அழுத்தம்

 


நம்பிக்கையில்லா பிரேரணை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கு முன்பாக அமைச்சுப் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்ளுமாறு உதய கம்மன்பிலவுக்கு பெரமுனவில் கடுமையான அழுத்தம் வழங்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


எரிபொருள் விலையுயர்வு சர்ச்சையின் பின்னணியில் உதய கம்மன்பிலவுக்கு எதிராக சமகி ஜன பல வேகய கொண்டு வந்திருக்கும் நம்பிக்கையில்லா பிரேரணை 19ம் திகதி விவாதிக்கப்படவுள்ளது. எனினும், அதற்கு முன் பதவி விலகினால் அரசுக்கு சங்கடம் இல்லாமல் போகும் என பெரமுன தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டு வருகிறது.


கம்மன்பிலவை தோற்கடிக்க அனுமதித்தால், அது அரசாங்கம் தோற்றதாகிவிடும் என்பதால் ஆளுங்கட்சி அவரைக் காப்பாற்றுவதே வழியென அண்மையில் திலும் அமுனுகம தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment