இலங்கையிலிருந்து சென்ற நபராலேயே மெல்பர்ன் லொக்டவுன் - sonakar.com

Post Top Ad

Tuesday 8 June 2021

இலங்கையிலிருந்து சென்ற நபராலேயே மெல்பர்ன் லொக்டவுன்

 


கடந்த மாதம் 8ம் திகதி இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகருக்குச் சென்ற இலங்கையர் ஒருவராலேயே அங்கு 'டெல்டா' அல்லது இந்திய வகை கொரோனா பரவல் ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


குறித்த நபர் மே மாதம் 8ம் திகதி அவுஸ்திரேலியா சென்றடைந்திருந்த நிலையில் அதே தினம் கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.


இதேவேளை, மெல்பர்ன் நகரில் கொரோனா தொற்று  அதிகரித்ததன் பின்னணியில் மே மாதம் 27ம் திகதி லொக்டவுன் அறிவிக்கப்பட்டிருந்ததுடன் இவ்வாரம் அது நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment