தாய்லாந்து தூதரகத்தின் காணி மோசடி; சட்டத்தரணி கைது - sonakar.com

Post Top Ad

Thursday 24 June 2021

தாய்லாந்து தூதரகத்தின் காணி மோசடி; சட்டத்தரணி கைது

 


கொழும்பில் இயங்கும் தாய்லாந்து தூதரகத்துக்குச் சொந்தமான 20 பேர்ச் காணிக்கு போலி உறுதியைத் தயார் சேய்து மோசடியாக விற்பனை செய்த விவகாரத்தின் பின்னணியில் சட்டத்தரணியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


50 கோடி ரூபா பெறுமதியான குறித்த காணிக்கு போலி உறுதி தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.


இவ்விவகாரத்தின் பின்னணியில் கைது செய்யப்பட்டுள்ள சட்டத்தரணியை இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment