எரிபொருள் விலையுயர்வு: கம்மன்பில மீது விசனம் - sonakar.com

Post Top Ad

Saturday 12 June 2021

எரிபொருள் விலையுயர்வு: கம்மன்பில மீது விசனம்

 


எரிபொருள் விலைகளை உயர்த்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்தமை குறித்து பரவலான விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.


குறிப்பாக, உலக சந்தையில் மசகு எண்ணையின் விலை வெகுவாக வீழ்ச்சியடைந்திருந்த காலத்தில் இலங்கையில் கையிருப்பை அதிகரிக்காதது ஏன்? என பெரமுன தரப்பிலேயே கேள்விகள் முன் வைக்கப்பட்டு வருகிறது.


இதேவேளை, குறைந்த விலையில் கிடைக்கக் கூடிய இடங்களைத் தவிர்த்து சிங்கப்பூரிலிருந்து அதிக விலைக்கு எரிபொருள் கொள்வனவு செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment