கொரோனா மரணங்கள்: ACJU வேண்டுகோள் - sonakar.com

Post Top Ad

Wednesday 2 June 2021

கொரோனா மரணங்கள்: ACJU வேண்டுகோள்

 



கொவிட் 19 தொற்றின் மூன்றாவது அலை மிகவும் ஆபத்தானதாக காணப்படுகின்றது. அதன் காரணமாக ஒவ்வொரு நாளும் மரணங்கள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. குறிப்பாக முஸ்லிம் சமூகத்தில் மரண வீதம் அதிகமாக காணப்படுவது மிகவும் கவலைக்குரிய விடயமாக இருக்கின்றது.


நிலைமை ஒவ்வொரு நாளும் தீவிரமடைந்து வரும் காரணத்தினால் கொவிட் - 19 யினால் ஏற்படும் ஜனாஸாக்களின் வீதத்தையும் புள்ளிவிவரங்களையும் கவனத்திற் கொண்டு, இவ்விடயத்தில் மிக அக்கறையுடனும் விழிப்பாகவும் இருக்குமாறு எமது சகோதர, சகோதரிகளிடம் அன்பாக கேட்டுக் கொள்கின்றோம்.


இந்த இக்கட்டான சந்தர்ப்பத்தை கவனத்திற் கொண்டு எமது உலமாக்கள், துறைசார்ந்தோர்கள், வியாபாரிகள், மஸ்ஜித் நிர்வாகிகள், சிவில் சமூகத் தலைவர்கள் மற்றும் சமய அமைப்புக்கள் அனைவரும் முஸ்லிம் சமூகத்தினதும், நாட்டினதும் நலனுக்காக பின்வரும் வழிகாட்டல்களை பின்பற்றுவதற்கு மக்களை ஆர்வமூட்டுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.


 

1. கொவிட் 19 தொற்றிலிருந்து எம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக சுகாதார வழிகாட்டல்களை முறையாக பின்பற்றுவதன் மூலம் முன்னெச்சரிக்கையாக இருந்து கொள்ளல்.


 

2. கொவிட் 19 தொற்று ஏற்பட்டால் அதை உடனடியாக பொது சுகாதார அதிகாரிகளுக்கு (PHI) அறிவித்துக் கொள்ளல். மேலும், அது சம்பந்தமாக சுகாதார அமைச்சு (MOU) யினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை கண்டிப்பாக பின்பற்றல்.


 

3. முஸ்லிம் சமூகத்தை தடுப்பூசி ஏற்றிக்கொள்வதற்கு ஆர்வமூட்டுதல்.


 

4. மஸ்ஜித் நிர்வாகிகள் தங்கள் பிரதேசத்திலும் மாவட்ட மட்டத்திலும் கொவிட் 19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு செயற்திறன்மிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல். மேலும், அந்த வைரஸ் அந்தந்த பகுதிகளில் பரவுவது குறித்து தொடர்ந்து விழிப்புடன் இருத்தல்.


 

5. அல்லாஹ்வின் பக்கம் மீண்டு, தற்போது ஏற்பட்டிருக்கும் இந்நிலைமையை சீராக்கவும், நாமும் நமது நாடும் இயல்பு நிலைக்கு திரும்பவும் அவனிடம் பிரார்த்தனை செய்தல்.




எல்லாம் வல்ல அல்லாஹு தஆலா எமது கஷ்டங்களை நீக்கி, இந்த கொவிட் 19 உடைய தாக்கத்திலிருந்து நமது நாடும், முழு உலகமும் பாதுகாப்புப் பெற நல்லருள் பாலிப்பானாக. ஆமீன்.


 

- All Ceylon Jamiyyathul Ulama (ACJU)


- Supreme Council of Sufi Thareeqas (SCOT - SL)


- National Shoora Council (NSC)


- All Ceylon YMMA Conference (ACYMMAC)


- Muslim Council of Sri Lanka (MCSL)


- Markez Islamic Center (MIC)


- Sri Lanka Jamaathe Islami (SLJI)


- Moors Islamic Cultural Home (MICH)


- Conference of Sri Lankan Malays (COSLAM)


- Memon Association of Sri Lanka (MASL)


- Anjuman E Saifi ( Sri Lanka) Trust Dawoodi Bohras


- All Ceylon Union of Muslim League Youth Fronts (ACUMLYF)


- RPSL Consortium 


- Sri Lanka Muslim Media Forum (SLMMF)


- Center for Islamic Studies - Harmony Center (CIS-HC)


- Colombo District Masjids Federation (CDMF)


- Sri Lanka Muslim Womens Conference (SLMWC)


- Zam Zam Foundation (ZZF)


- Association of Muslim Youth of Sailan (AMYS)


- All University Muslim Student Association (AUMSA)


- Sri Lanka Muslim Civil Society (SLMCS)


- Muslim Ladies Study Circle (MLSC)


- Association of Muslim Women Professionals and Entrepreneurs (AMWPE)


- Sri Lanka Katheeb & Muazzin Welfare Organisation (SLKMWO)


- Kandy District Masjids Federation (KDMF)

No comments:

Post a Comment