8ம் திகதிக்குள் பசில் MPயாவார்: பெரமுன - sonakar.com

Post Top Ad

Sunday, 27 June 2021

8ம் திகதிக்குள் பசில் MPயாவார்: பெரமுன

 


எதிர்வரும் 8ம் திகதிக்குள் பசில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராவது உறுதியென தெரிவிக்கின்றனர் பெரமுனவில் உள்ள அவரது ஆதரவாளர்கள்.


பசில் ராஜபக்சவுக்கு முக்கியமான அமைச்சுப் பதவியொன்றும் எதிர்பார்க்கப்படுகின்ற அதேவேளை பெரமுனவின் கட்டுப்பாடு அவரிடம் இருப்பதே கட்சிக்கு நல்லதென அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.


வியத்மக அணியினர் விமல் - கம்மன்பில தரப்போடு முறுகலை உருவாக்கியுள்ள நிலையில் கட்சியில் பசிலின் தலையீடு குறித்த மாற்றுப் பார்வைகளும் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment