21ம் திகதிக்குப் பின்னரும் 'தடை' தொடரலாம்: கெஹலிய - sonakar.com

Post Top Ad

Tuesday 15 June 2021

21ம் திகதிக்குப் பின்னரும் 'தடை' தொடரலாம்: கெஹலிய

 


தற்போது அமுலில் இருக்கும் நாடளாவிய ரீதியிலான போக்குவரத்துத் தடையை 21ம் திகதியுடன் நீக்குவது குறித்து இன்னும் இறுதித் தீர்மானம் எதுவும் இல்லையென தெரிவித்துள்ளார் அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல.


இது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ள அவர், எப்போது பிரயாணத்தடையை நீக்குவது என்பதை எதிர்வு கூறக் கூடிய சூழ்நிலையில்லையென விளக்கமளித்துள்ளார்.


ஜுன் 7ம் திகதியிலிருந்து 14ம் திகதிக்கும், அதிலிருந்து 21ம் திகதி வரைக்கும் போக்குவரத்துத் தடை நீடிக்கப்பட்டுள்ள போதிலும் தினசரி கொரோனா விதி மீறல்களின் பின்னணியில் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment