நாட்டில் தற்போது அமுலில் உள்ள பிரயாணத் தடை எதிர்வரும் 21ம் திகதி திட்டமிட்டபடி நீக்கப்பட்டு மீண்டும் 23ம் திகதி முதல் 25ம் திகதி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் பொது வெளிகளில் ஒன்று கூடுவதற்கான தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை 23ம் திகதி இரவு 10 மணி முதல் 25ம் திகதி காலை 4 மணி வரை நாடளாவிய ரீதியிலான தடை அமுலுக்கு வரும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதாரம் முடங்கிப் போவதை அனுமதிக்க முடியாது என ஜனாதிபதி அண்மையில் தெரிவித்திருந்தமையும் பொருளாதாரத்தை விட மக்கள் நலனே முக்கியம் என எதிர்க்கட்சிகள் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment