துப்பாக்கி திருட்டு: STF சிப்பாய் கைது - sonakar.com

Post Top Ad

Sunday, 30 May 2021

துப்பாக்கி திருட்டு: STF சிப்பாய் கைது

 


அக்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் காவல் கடமையில் ஈடுபட்டு வந்த விசேட அதிரடிப் படை வீரர் ஒருவர் வேறு ஒரு சிப்பாயின் ரி-56 ரக துப்பாக்கியைத் திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.


குறித்த நபர், துப்பாக்கியைத் திருடி அதனை காலி, பத்தேகம பகுதிக்குக் கொண்டு சென்று மறைத்து வைத்திருந்த நிலையில் துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


அத்துடன், குறித்த நபரின் நண்பர்கள் என அறியப்படும் மூவரையும் பொலிசார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment