ஜோன்ஸ்டனும் கைது செய்யப்பட வேண்டும்: SJB - sonakar.com

Post Top Ad

Saturday, 29 May 2021

ஜோன்ஸ்டனும் கைது செய்யப்பட வேண்டும்: SJB

 


மொரட்டுவ மேயரைப் போன்று குருநாகலில் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ தடுப்பூசி வழங்கலைக் கட்டுப்படுத்தி வருவதாகவும் அவரும் கைது செய்யப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கிறார் சமகி ஜன பல வேகய நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி.


குருநாகலில் ஜோன்ஸ்டனின் விருப்பத்துக்கு ஏற்பவே தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் அவரது தயவின்றி தடுப்பூசி பெற முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளதாகவும் சமிந்த விளக்கமளித்துள்ளார்.


மொரட்டுவ மேயரின் செயற்பாட்டினை 'அசிங்கமான' செயல் என ஜனாதிபதி விசனம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment