எதிர்வரும் 17ம் திகதி வரை நாடு முடக்கப்பட்டுள்ளதாக தகவல் பரப்பி வரும் நபர்களை தேடி விசேட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கின்ற குற்றவியல் விசாரணைப் பிரிவினர்.
இன்று முதல் 17ம் திகதி வரை நாடு தழுவிய ஊரடங்கு அமுலுக்கு வருவதாக வதந்தி பரப்பப்படுவதாகவும் அதனை உருவாக்கியவர்களை கைது செய்து தண்டனை பெற்றுக் கொடுப்பதற்கான அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவிக்கிறார்.
கொரோனா தொற்று தீவிரமாகியுள்ள நிலையில் பல கிராம சேவை பிரிவுகள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளமையும் அவை அரசாங்கத்தால் தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment