தற்போது அமுலில் இருக்கும் போக்குவரத்து தடையை, கொரோனா சூழ்நிலை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் வரும் வரை நீக்க வேண்டாம் என அரசை வலியுறுத்தியுள்ளது விசேட வைத்தியர்கள் சங்கம் (Association of Medical Specialists).
நாடென்ற வகையில் பொருளாதாரம் முக்கியமானது என்றாலும் கூட மக்கள் நலனே தற்போது முதன்மைப்படுத்த வேண்டும் என குறித்த அமைப்பு தமது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அண்மைக்காலமாக தினசரி 2500க்கு அதிகமான தொற்றாளர்கள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment