வெலே சுதாவின் உயிர் பாதுகாப்பு கோரி நீதிமன்றில் மனு! - sonakar.com

Post Top Ad

Monday 17 May 2021

வெலே சுதாவின் உயிர் பாதுகாப்பு கோரி நீதிமன்றில் மனு!

 


தொடர்ச்சியாக பாதாள உலக பேர்வழிகள் பொலிசாரினால் சுட்டுக் கொலை செய்யப்பட்டு வரும் நிலையில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் என அறியப்படும் வெலே சுதாவின் உயிரைக் காப்பாற்றுமாறு கோரி அவரது தாயார் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.


இலங்கையின் 60 வீதத்துக்கு அதிகமான போதைப் பொருள் விநியோகத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாகக் கூறப்படும் வெலே சுதாவுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.


அண்மைக்காலமாக பிரபல பாதாள உலக பேர்வழிகள் பொலிசாரினால் வெளியில் அழைத்துச் செல்லப்படும் நிலையில் கொலையாவதன் அச்ச சூழ்நிலையில் இவ்வாறு அவரது தாயார் மனுத் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment