இன்றிரவு 11 மணி முதல் திங்கள் காலை 4 மணி வரை நாட்டின் அனைத்து பாகங்களுக்கும் அமுலுககு வரும் வகையில் 'பொதுவான' போக்குவரத்துக் கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய தேவைகள், மருந்து மற்றும் உணவுகளுக்கான போக்குவரத்துக்கு மாத்திரமே அனுமதியுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அனைத்து வர்த்தக நிலையங்களையும் இக்காலப் பகுதியில் மூடி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று தீவிரமடைந்து வைத்தியசாலைகளில் இடவசதிக் குறைபாடு நிலவுகின்ற போதிலும் நாட்டை முழுமையாக முடக்கும் எண்ணமில்லையென்றே தொடர்ந்தும் அரசு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment