ரிசாத் நாடாளுமன்றம் செல்லலாம்: ச.மா அதிபர் - sonakar.com

Post Top Ad

Wednesday 5 May 2021

ரிசாத் நாடாளுமன்றம் செல்லலாம்: ச.மா அதிபர்

 


பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன், நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்வதற்கு சட்டச் சிக்கல்கள் எதுவுமில்லையென விளக்கமளித்துள்ளார் சட்டமா அதிபர்.


இதற்கான அனுமதி கோரப்பட்டிருந்த நிலையில் சட்டமா அதிபர் குற்றவியல் விசாரணைப் பிரிவுக்கு இவ்வாறு விளக்கமளித்துள்ளார்.


எனினும், விசாரணைகள் முடியும் வரை அவரை நாடாளுமன்றம் வர அனுமதிக்கக் கூடாது என சரத் வீரசேகர சபாநாயகரிடம் இன்று வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment