கொரோனா உடலங்களை 'இலவசமாக' எரிக்க சுற்று நிருபம் - sonakar.com

Post Top Ad

Monday, 3 May 2021

கொரோனா உடலங்களை 'இலவசமாக' எரிக்க சுற்று நிருபம்

  


இலங்கையில் கொரோனா மரணங்கள் அதிகரித்துச் செல்லும் அதேவேளை பல கிராமப்புறங்களிலிருந்தும் மரணங்கள் பதிவாகி வருகின்றன.


இந்நிலையில், சில இடங்களில் எரியூட்டலுக்கு கட்டணம் அறவிடப்படுவதால் மக்கள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டு வருவதன் பின்ணியில் கொரோனா உடலங்களை தகனம் செய்யும் நடவடிக்கைகள் இலவசமாகவே மேற்கொள்ளப்படும் எனும் அறிவிப்பை சுற்று நிருபம் ஊடாக வெளியிடவுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன்.


இறந்தவர் வாழ்ந்த மாகாணங்களிலேயே எரியூட்டலை மேற்கொள்ள முடியும் எனவும் அமைச்சர் இன்று தெரிவித்துள்ளமையும் கடந்த காலங்களில் ஜனாஸாக்களை எரியூட்டக் கொண்டு செல்வதற்கும் கட்டணம் அறவிடும் வழக்கம் உருவாக்கப்பட்டு மக்கள் அவதியுற்றிருந்தமையும் நினைவூட்டத்தக்கது.

No comments:

Post a Comment