ஜுன் மாதம் இரு வாரங்களுக்கு நாடளாவிய லொக்டவுன் அறிவிக்கப்படவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் போலியான செய்தி பரவுவதாகவும் அதனை நம்ப வேண்டாம் எனவும் தெரிவிக்கிறார் இராணுவ தளபதி.
அரசாங்கம் அவ்வாறு எதையும் இன்னும் திட்டமிடவில்லையெனவும் ஜுன் 1ம் திகதி முதல் இரு வாரங்களுக்கு நாடு முழுமையாக முடக்கப்படவுள்ளதாக பரவும் செய்தி போலியானது எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
இலங்கையில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில் தற்சமயம் 30165 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment