புல்மோட்டையில் முதலாவது கொரோனா ஜனாஸா பதிவு! - sonakar.com

Post Top Ad

Sunday, 16 May 2021

புல்மோட்டையில் முதலாவது கொரோனா ஜனாஸா பதிவு!

 


நேற்றைய தினம் புல்மோட்டை தள வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக இடமாற்றம் செய்யப்பட்டிருந்த வேளையில் புல்மோட்டை பகுதியைச் சோந்த 29 வருட ஆசிரிய சேவை அனுபவம் உள்ள  சகோதரர் S. ஜலால்தீன் (56), கொரோனா தொற்றினால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


பி.சி.ஆர் பரிசோதனையின் பின்னணியில் அவருக்கு கொரோனா தொற்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை, ஜனாஸாவை நாளைய தினம் வாழைச்சேனையில் அடக்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.


குடும்பத்தில் நால்வர் இறுதிக் கிரியைகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ள அதேவேளை புல்மோட்டை பகுதியில் கொரோனா பாதிப்பினால் ஏற்பட்ட முதலாவது உயிரிழப்பு இதுவாகும்(சோனகர்.கொம்).


- Faizer M.

No comments:

Post a Comment