ஏப்ரல் மாத துவக்கத்திலிருந்து சுகாதார அதிகாரிகள் பிரயாணத் தடை மற்றும் கட்டுப்பாடுகளைக் கொண்டு வருமாறு தெரிவித்தும் அதற்கு செவி மடுக்காத அரசாங்கம், முஸ்லிம்களின் பெருநாளை முன்னிட்டு இனவாத அடிப்படையில் போக்குவரத்து கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளதாக தெரிவிக்கிறார் நா.உ முஜிபுர் ரஹ்மான்.
நாட்டில் ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து பல்வேறு தரப்பினர் சுட்டிக்காட்டியும் செவிமடுக்காத அரசு, நோன்புப் பெருநாள் நேரத்தில் திட்டமிட்டு இவ்வாறு விசேட தடையை அறிவித்துள்ளதாக அவர் தெரிவிக்கிறார்.
கொவிட் மரணங்களின் போதும் இவ்வாறே அரசின் நடவடிக்கை அமைந்திருந்ததாக அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment