ஈஸ்டர்: இன்னும் பலருக்கு எதிராக வழக்கு; அமைச்சர் - sonakar.com

Post Top Ad

Saturday 29 May 2021

ஈஸ்டர்: இன்னும் பலருக்கு எதிராக வழக்கு; அமைச்சர்

 


ஈஸ்டர் தாக்குதல் விவகாரம் தொடர்பில் மேலும் பலருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கிறார் பொது மக்கள் பாதுகாப்புக்கான அமைச்சர் சரத் வீரசேகர.


ஏலவே இவ்விவகாரத்தின் பின்னணியில் பலர் கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை பெரும்பாலனவர்களின் விசாரணைகள் இன்னும் முடிவுறவில்லையென அண்மையில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது.


முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன், முன்னாள் ஆளுனர் அசாத் சாலி, ரியாஜ் பதியுதீன், ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ், முன்னாள் ஜமாத்தே இஸ்லாமி தலைவர் ஹஜ்ஜுல் அக்பர் உட்பட எழு நூறுக்கும் அதிகமானோர் ஏலவே தடுத்து வைக்கப்பட்டு 'தொடர்ந்தும்' விசாரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment