நாடு இருக்கும் சூழ்நிலையில் வெளிநாட்டிலிருந்து ஹெலிகப்டர் கொள்வனவு செய்வதை விடுத்து, அப்பணத்தை கொரோனா தடுப்பு செயற்பாடுகளுக்கும் மக்களுக்கும் செலவு செய்யுமாறு அண்மையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்த கருத்துக்கு பதிலளித்துள்ளார் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா.
வெளிநாடுகளுடன் செய்யப்படும் ஒப்பந்தங்களின் பிரகாரம் பெறப்படும் நிதியை வேறு எதற்கும் பயன்படுத்த முடியாது என்பது சஜித்துக்கு தெரியவில்லையெனவும் ஆதலால் அரசாங்கம் ஹெலிகப்டர் கொள்வனவை நிறுத்தாது எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
ஒப்பந்தத்தை மீறினால் அபராதம் செலுத்த வேண்டியேற்படும் எனவும் அவர் தெரிவிக்கிறார்.
No comments:
Post a Comment