ஒக்சிஜன்: சீனாவின் உதவியை நாடியுள்ள பிரதமர் - sonakar.com

Post Top Ad

Monday 10 May 2021

ஒக்சிஜன்: சீனாவின் உதவியை நாடியுள்ள பிரதமர்

 


நாட்டில் ஒக்சிஜன் தட்டுப்பாடு உருவாகக் கூடும் என்ற அச்ச சூழ்நிலையில் சீனாவிடம் இதற்கான உதவியைக் கோரியுள்ளார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச.


இந்தியாவில் ஒக்சிஜன் தட்டுப்பாட்டால் பெருமளவு மரணங்கள் நிகழ்ந்துள்ள அதேவேளை, இலங்கையிலும் தற்போது கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ளது. நேற்றைய தினம் 2500க்கு அதிக தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் வைத்தியசாலைகளில் இடப்பற்றாக்குறை நிலவுகிறது.


இந்நிலையில் ஒக்சிஜன் மற்றும் அவசர சிகிச்சைகளுக்கான உபகணரங்களை வழங்குமாறு சீன தூதரகத்திடம் பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment