முன்ளாள் ஆளுனர் அசாத் சாலி சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை வழக்கின் பரிசீலனை இன்று ஆரம்பிக்கப்பட்ட நிலையில், மே 21ம் திகதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
அவருக்கெதிரான விசாரணைகளை நிறைவு செய்யவில்லையென குற்றவியல் விசாரணைப் பிரிவினர் தெரிவித்திருந்த நிலையில் இவ்வாறு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் அசாத் சாலிக்கு எதிராக இதுவரை குற்றச்சாட்டுகள் எதுவும் தரப்படவில்லையெனவும், விசாரணைகள் மாத்திரமே இடம்பெற்று வருவதாகவும் அவரது சட்டத்தரணிகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment