ஒரு தொகை ஒக்சிஜன் சிலிண்டர்கள் வந்து விட்டது: அமைச்சர் - sonakar.com

Post Top Ad

Saturday 15 May 2021

ஒரு தொகை ஒக்சிஜன் சிலிண்டர்கள் வந்து விட்டது: அமைச்சர்

 


வெளிநாட்டிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட ஒரு தொகை 'ஜம்போ' ஒக்சிஜன் சிலிண்டர்கள் நேற்றைய தினம் நாட்டை வந்து அடைந்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன.


தலா 5640 லீற்றர் கொள்ளவு கொண்ட சிலிண்டர்களே இவ்வாறு கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் தினசரி 13,000 சிலிண்டர்களில் ஒக்சிஜன் நிரப்பக் கூடிய வகையில் கரவலபிட்டியவில் அமைக்கப்படும் தொழிற்சாலையும் விரைவில் இயங்கும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.


அத்துடன் சுமார் 25 வைத்தியசாலைகளில் பெரிய அளவிலான ஒக்சிஜன் தாங்கிகளை உருவாக்கவும் திட்டமிடப்பட்டிருப்பதாகவும் வைத்தியசாலைகளுக்கான ஒக்சிஜன் விநியோகத்தை சீராக்குவதற்கான திட்டம் செயற்படுத்தப்பட்டு வருவுதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment