ஹெலிகப்டரை கை விட்டு கொரோனாவை பாருங்கள்: சஜித் - sonakar.com

Post Top Ad

Tuesday 4 May 2021

ஹெலிகப்டரை கை விட்டு கொரோனாவை பாருங்கள்: சஜித்

 


நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் தீவிரமடைந்து, பல இடங்களில் சிகிச்சை பெறுவது கடினமாக இருக்கின்ற சூழ்நிலையில் அரசாங்கம் ரஷ்யாவிடம் உலங்கு வானூர்திகளை கொள்வனவு செய்ய எடுக்கும் முயற்சி தொடர்பில் விசனம் வெளியிட்டுள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச.


மக்களுக்கு சிகிச்சையளிப்பதற்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் ஹெலிகப்டர் கொள்வனவு தற்போது அவசியமற்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


இது போன்ற சூழ்நிலையில் அரசாங்கம் பணத்தை விரயப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment