குவைத்: இலங்கையிலிருந்து பயணிக்கத் தடை - sonakar.com

Post Top Ad

Tuesday 11 May 2021

குவைத்: இலங்கையிலிருந்து பயணிக்கத் தடை

 இலங்கையிலிருந்து குவைத் பயணிப்பதற்கு அந்நாட்டு அரசாங்கம் மறு அறிவித்தல் வரை தடை விதித்துள்ளது.


இலங்கை, பாகிஸ்தான், பங்களதேஷ், நேபாள் உட்பட்ட ஆசிய நாடுகளில் தங்கியிருந்தவர்கள் நேரடியாக பயணிக்க முடியாது எனவும் அனுமதிக்கப்பட்ட வேறு ஒரு நாட்டில் 14 நாட்களுக்கு மேலாக தங்கியிருந்தவர்கள் வரலாம் என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத குவைத்தியர் வெளிநாடு செல்லவும் இம்மாதம் தடை விதிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment