காரால் மோதி ஊழியர்களை மிரட்டிய நசீர் அஹமது! (video) - sonakar.com

Post Top Ad

Monday 12 April 2021

காரால் மோதி ஊழியர்களை மிரட்டிய நசீர் அஹமது! (video)

 


ஏறாவூரில் தனது தொழிற்சாலையில் பணி புரிந்து, மாதக் கணக்கில் ஊதியம் வழங்கப்படாததனால் போராட்டத்தில் குதித்த ஊழியர்களை, நாடாளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமது சார்பாக காரால் மோதி மிரட்டிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.


20ம் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவளித்து விட்டு ஊர்ப் பக்கம் 'தலை' காட்ட முடியாமல் இருந்த நிலையில் நசீர் அஹமதின் தொழிற்சாலை ஊழியர்களின் சம்பள கொடுப்பனவும் முடங்கிப் போயிருந்தது. அத்துடன் அவருக்கு வாக்களித்த மக்களும் அவரை சந்திக்க முடியாத சூழ்நிலையிருந்தது.


இந்நிலையில், ஜனாஸா எரிப்பை அரசு கை விட்ட பின்னர் தலை காட்ட ஆரம்பித்துள்ள நசீர் அஹமது, அரசாங்கம் வெற்றுப் பெட்டிகளையே எரித்ததாகவும் கருத்துக் கூறி சர்ச்சையை உருவாக்கியிருந்தமையும் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக செலவு செய்த பெருந்தொகைப் பணத்தை வசூலிப்பதற்காக 'எதையும்' செய்யத் துணிந்துள்ளதாகவும் மக்கள் விசனம் வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment