யாழ், பருத்தித்துறை பகுதி சோதனைச் சாவடியொன்றில் நிறுத்தாமல் பயணித்த கப் ரக வாகனமொன்றின் மீது விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
நிறுத்துவதற்கான அறிவுறுத்தலை மீறி குறித்த வாகனம் வேகமாகச் செல்ல முயன்றதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசத்தில் சட்டவிரோத மண் கடத்தல் இடம்பெறுவதன் பின்னணியில் இச்சோதனைச் சாவடி நிர்மாணிக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment