மஹிந்தவின் கூட்டத்திலிருந்து எழுந்து சென்ற விமல் குழு - sonakar.com

Post Top Ad

Monday, 19 April 2021

மஹிந்தவின் கூட்டத்திலிருந்து எழுந்து சென்ற விமல் குழு

 


பெரமுனவில் வலுத்து வரும் உட்கட்சிப்பூசலை முடிவுக்குக் கொண்டு வரும் நிமித்தம் மஹிந்த ராஜபக்சவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கட்சித் தலைவர்கள் சந்திப்பிலிருந்து விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் வாசுதேவ நானாயக்கார எழுந்து சென்றுள்ளனர்.


கட்சித் தலைவர்கள் சந்திப்பென்று கூறிவிட்டு, அங்கு கட்சித் தலைவர்கள் அல்லாதவர்களும் அழைக்கப்பட்டிருந்ததாகவும் அதனால் கருத்து முரண்பாடுகள் வலுப்பதைத் தவிர்ப்பதற்காகவுமே தாம் எழுந்து சென்றதாக விமல் கூட்டணி விளக்கமளித்துள்ளது.


பசில் ராஜபக்ச - வியத்மக கூட்டணிக்கும் விமல் - கம்மன்பில குழுவுக்கும் இடையில் முரண்பாடுகள் வலுத்துள்ளதாக பெரமுன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment