அச்சுறுத்தி எங்களை அடக்க முடியாது: அநுர சவால்! - sonakar.com

Post Top Ad

Friday 23 April 2021

அச்சுறுத்தி எங்களை அடக்க முடியாது: அநுர சவால்!

 


பிரஜாவுரிமை பறிப்பு எனும் அச்சுறுத்தலை முன் வைத்து மக்களுக்காகக் குரல் கொடுக்கும் மக்கள் பிரச்சினைகளைப் பேசும் தம்மை அடக்க முடியாது என சவால் விடுத்துள்ளார் அநுர குமார திசாநாயக்க.


நாட்டின் ஊழல்வாதிகளை அடையாளங்காட்டி அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வரும் தம்மையும் தம் சகாக்களையும் ஆட்சியாளர்கள் அச்சுறுத்தி அடக்கி வைப்பதுடன் தமக்கெதிரான வழக்காடப் போவதாக பூச்சாண்டி காட்டி வருவதாகவும் தெரிவித்த ஜே.வி.பி தலைவர், இதற்கெல்லாம் தாம் அஞ்சப் போவதில்லையென சவால் விடுத்துள்ளார்.


இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றுகையில் ஆளுங்கட்சியினர் தொடர்ச்சியாக அநுர குமாரவுக்கு இடையூறு விளைவித்து வந்த நிலையில், தமது ஆசனங்களில் அமரக் கூடத் தெரியாத கூடுகளில் இருந்து திறந்து விடப்பட்ட வானரங்கள் போன்று பெரமுன உறுப்பினர்கள் நடந்து கொள்வதாகவும் அநுர தெரிவித்திருந்தார்.


ஜனாதிபதி ஆணைக்குழு நியமனத்தின் தொடர்பில் உறுதியான சுற்றுநிருபம் ஒன்றை வெளியிட முடியாது மாற்றி மாற்றி அச்சிடும் நிலையிலேயே ஜனாதிபதியின் நிலையும் இருப்பதாக அநுர இதன் போது சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment