ஒக்சிஜன் தட்டுப்பாட்டால் திணறும் இந்தியா! - sonakar.com

Post Top Ad

Saturday, 24 April 2021

ஒக்சிஜன் தட்டுப்பாட்டால் திணறும் இந்தியா!

 


இந்தியாவில் கடந்த சில நாட்களுக்குள் மிக வேகமான கொரோனா தொற்று இடம்பெற்று வரும் அதேவேளை வைத்தியசாலைகளில் போதியளவு ஒக்சிஜன் இல்லாது திண்டாட்டம் நிலவுகிறது.


பல இடங்களில் மரண எண்ணிக்கை அதிகரித்து வரும் அதேவேளை துரதிஷ்டவசமாக, அடிப்படை சிகிச்சையை மேற்கொள்வதற்கும் போதியளவு ஒக்சிஜன் இல்லாததால் வைத்தியசாலைகள் திணறி வருகின்றன.


கடந்த மூன்று தினங்களில் சுமார் ஒரு மில்லியன் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதுடன் இரண்டாயிரத்து அறுநூற்றுக்கும் அதிகமான மரணங்கள் பதிவாகியுள்ளன. இந்நிலையில், வெளிநாடுகளின் உதவியைப் பெற இந்தியா முயற்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment