கொரோனா தொற்றாளர்களை வைத்துப் பராமரிப்பதற்கான இட வசதி குறைபாட்டினைத் தீர்ப்பதற்கான முயற்சிகள் கம்பஹாவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பல இடங்களில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களை தற்காலிகமாக வீடுகளிலேயே தங்க வைத்து சிகிச்சை வழங்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்சமயம், 7976 பேர் நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றமையும் நேற்றைய தினம் ஆயிரத்துக்கு மேற்பட்ட புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment