கொழும்பு: சீனர்களின் சட்ட விரோத சூதாட்ட விடுதி முற்றுகை - sonakar.com

Post Top Ad

Wednesday 7 April 2021

கொழும்பு: சீனர்களின் சட்ட விரோத சூதாட்ட விடுதி முற்றுகை

 


கொழும்பு - 4, லொரிஸ் வீதியில் சீனர்களால் நடாத்தப்பட்டு வந்த சட்ட விரோத சூதாட்ட விடுதியொன்று நேற்றிரவு பொலிசாரினால் முற்றுகையிடப்பட்டுள்ளது.


இப்பின்னணியில், ஒரு பெண் உட்பட ஐந்து சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 1 மில்லியன் ரூபா இலங்கைப் பணமும் 2600 சீன யுவானும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


சுற்றுலா விசாவில் வந்து தங்கியிருந்த நபர்களே இவ்வாறு சூதாட்ட விடுதி நடாத்தியிருப்பதாக பொலிசார் விளக்கமளிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment