ஞானசாரவுக்கு உயிராபத்து; காவல் பணியில் பொலிஸ்! - sonakar.com

Post Top Ad

Sunday, 25 April 2021

ஞானசாரவுக்கு உயிராபத்து; காவல் பணியில் பொலிஸ்!

 


பொது பல சேனாவின் ஞானசாரவைக் கொலை செய்யும் நோக்கில் மாலைதீவிலிருந்து தீவிரவாத குழுவொன்று வந்திருப்பதாகவும் இதனால் அவருக்கு உயிராபத்து ஏற்பட்டிருப்பதாகவும் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் அவருக்கு 'தகவல்' வழங்கியுள்ளனர்.


இப்பின்னணியில், ஞானசாரவின் விகாரைக்கு பொலிஸ் பாதுகாப்பும் மீண்டும் வழங்கப்பட்டுள்ளதுடன் அவர் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என 'அறிவுரை'யும் வழங்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.


நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்காக ஞானசார மேற்கொண்ட கடினமான போராட்டத்தை ரதன தேரர் முறியடித்து முடிவுக்கு கொண்டு வந்திருந்தமை நினைவூட்டத்தக்கது.

No comments:

Post a Comment