வீடுகளில் இருங்கள்: பொலிசார் வேண்டுகோள்! - sonakar.com

Post Top Ad

Wednesday, 28 April 2021

வீடுகளில் இருங்கள்: பொலிசார் வேண்டுகோள்!

 


கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் உள்ள மக்களை தமது வீடுகளிலேயே இருக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர் பொலிசார்.


வைத்தியசாலைக்குச் செல்ல வேண்டிய 'அவசரம்' தவிர வேறு காரணங்களுக்காக இவ்வாறான பிரதேசங்களிலிருந்து மக்களை வெளியேற அனுமதிக்கப் போவதில்லையெனவும், சுகாதார அதிகாரிகள் தவிர வெளியார் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் விளக்கமளித்துள்ளார்.


தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் வாழும் பொலிஸ் அதிகாரிகளும் இக்கட்டுப்பாட்டுக்கமைவாக வீடுகளிலேயே இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment