துறைமுக நகரால் எந்த 'பாதிப்பும்' இல்லை: நீதியமைச்சர் - sonakar.com

Post Top Ad

Sunday, 18 April 2021

துறைமுக நகரால் எந்த 'பாதிப்பும்' இல்லை: நீதியமைச்சர்

 


துறைமுக நகரம் தொடர்பிலான பிரேரணை மீதான அச்சம் அவசியமற்றது எனவும் அதனால் நாட்டுக்கு எவ்வித பாதிப்பும் இல்லையென தெரிவிக்கிறார் நீதியமைச்சர் அலி சப்ரி.


குறித்த இடம் நாட்டின் சட்ட - திட்டங்களுக்குட்பட்டே இயங்கும் எனவும் அங்கு நடைபெறும் விடயங்களுக்கும் இலங்கை நீதிமன்றங்களிலேயே வழக்காடப்படும் எனவும் தெரிவிக்கின்ற நீதியமைச்சர், குத்தகைக்கு மாத்திரமே நிலம் வழங்கப்படுவதாக தெரிவிக்கிறார்.


எனினும், துறைமுக நகரத்தின் நிதிக்கட்டுப்பாடு மற்றும் ஏனைய விதி முறைகள் 'பிரத்யேகமானவை' எனவும் அது தனி நாடு போன்றே இயங்கும் எனவும் ஜே.வி.பி உட்பட எதிர்க்கட்சிகளும் விஜேதாச ராஜபக்சவும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment