மே தினம்; பெரமுனவுடன் சேர்வதில்லை: தயாசிறி - sonakar.com

Post Top Ad

Tuesday 20 April 2021

மே தினம்; பெரமுனவுடன் சேர்வதில்லை: தயாசிறி

 


இம்முறை மே தின நடவடிக்கைகளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனியாகவே மேற்கொள்ளும் என அறிவித்துள்ளார் அக்கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர.


பொதுஜன பெரமுனவுடன் ஆட்சியில் பங்கெடுத்தாலும் சுதந்திரக் கட்சிக்குத் தகுந்த மரியாதை தரப்படவில்லையென்ற குற்றச்சாட்டு தொடர்ந்து நிலவுகிறது. இந்நிலையில் சுதந்திரக் கட்சியினர் அண்மைக் காலமாக தமது கட்சியைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


எதிர்வரும் தேர்தல்களிலும் தனித்துப் போட்டியிடுவது குறித்து பேசப்படும் அதேவேளை மே தின நிகழ்வுகளைத் தாம் தனியாகவே நடாத்தப் போவதாகவும் பெரமுனவுடன் சேரப் போவதில்லையெனவும் தயாசிறி தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment