'முஸ்லிம்' மரண விசாரணை அதிகாரி 'இல்லை': நீதியமைச்சர் - sonakar.com

Post Top Ad

Sunday 4 April 2021

'முஸ்லிம்' மரண விசாரணை அதிகாரி 'இல்லை': நீதியமைச்சர்

 


பிரத்யேகமாக முஸ்லிம் மரண விசாரணை அதிகாரி நியமிக்கப்படவுள்ளதாகவும் அதற்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளதாகவும் சமூக மட்டத்தில் பரவி வரும் தகவல் தவறானது என தெரிவித்துள்ளார் நீதியமைச்சர் அலி சப்ரி.


மாறாக, மரண அதிகாரிகளின் குறைபாட்டைத் தீர்ப்பதற்கான புதிய விண்ணப்பங்களே கோரப்பட்டுள்ளன என அவர் விளக்கமளித்துள்ளார்.


முஸ்லிம் மரண விசாரணை அதிகாரிகளை அரசு நியமிக்கவுள்ளதாகவும் அதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுவதாகவும் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவலில் உண்மையில்லையென விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment