ரிசாத் - ரியாஜ் மீண்டும் கைது: 'நேரடி' தொடர்பு; பொலிஸ் - sonakar.com

Post Top Ad

Saturday 24 April 2021

ரிசாத் - ரியாஜ் மீண்டும் கைது: 'நேரடி' தொடர்பு; பொலிஸ்

 


ஈஸ்டர் தாக்குதல் விவகாரத்தின் பின்னணியில் முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜை நள்ளிரவில் பொலிசார் கைது செய்துள்ளனர்.


ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணையில் அதிருப்தி வெளியிட்டு வந்த கார்டினல், கடந்த தடவை ரிசாதின் கைது, அவரது கட்சி உறுப்பினர்களின் 20ம் திருத்தச் சட்டத்துக்கான ஆதரவு போன்ற விவகாரங்களை முன் வைத்து ஊடகங்களில் கருத்து வெளியிட்டு வந்ததுடன் இதன் பின்னணியில் 'டீல்' இருந்ததாகவும் தெரிவித்திருந்தார்.


இந்நிலையில், திடீரென இக்கைது இடம்பெற்றுள்ள அதேவேளை தாக்குதல்தாரிகளுக்கு 'நோடியாக' உதவியதற்கான ஆதாரங்கள் இருப்பதன் பின்னணியிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிசார் விளக்கமளித்துள்ளார். ஆயினும், தாம் எந்தக் குற்றமும் செய்யாதவர் என கைதுக்கு முன்பாக ரிசாத் பதியுதீன் காணொளிப் பதிவொன்றை வெளியிட்டுச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment