ஹரினை கைது செய்யக் கூடாது: தயாசிறி - sonakar.com

Post Top Ad

Wednesday 28 April 2021

ஹரினை கைது செய்யக் கூடாது: தயாசிறி

 


ஈஸ்டர் தாக்குதல் பற்றி ஹரின் பெர்னான்டோ வெளியிட்ட தகவல் கைது செய்து அடைக்க வேண்டிய விடயமன்று, மாறாக அது தீர விசாரிக்கப்பட வேண்டிய ஒன்று என தெரிவிக்கிறார் தயாசிறி ஜயசேகர.


ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் தொடர்ச்சியாக பல கைதுகள் இடம்பெற்று வருகின்ற அதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னான்டோவும் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


எனினும், அது தவறான நடவடிக்கையாக அமையும் என தயாசிறி தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment