மார்ச்சில் 4000 கோடி ரூபா 'அச்சிடப்பட்டுள்ளது': சஜித் - sonakar.com

Post Top Ad

Sunday 4 April 2021

மார்ச்சில் 4000 கோடி ரூபா 'அச்சிடப்பட்டுள்ளது': சஜித்மார்ச் மாதத்தில் மாத்திரம் அரசாங்கம் 4000 கோடி ரூபா பணத்தை அச்சிட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச.


கடந்த ஆட்சிக்காலத்திலும் பண வீக்கம் இருந்தது உண்மையெனவும் அதன் போது, பெரமுனவினர் தினமும் செய்தியாளர் சந்திப்பு நடாத்தி அரசாங்கம் பணத்தின் பெறுமதியைக் குறைய விடுவதாகவும் தமது ஆட்சியில் அவ்வாறு நடக்காது எனவும் கூறி வந்ததாகவும், இப்போது முன்னெப்போதும் இல்லாத பண வீக்கம் ஏற்பட்டிருப்பதாகவும் சஜித் மேலும் விளக்கமளித்துள்ளார்.


இத்தொகை பணத்தை வைத்து வீடுகள் நிர்மாணிக்கப்படவோ, வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவோ இல்லையெனவும் அரசு தொடர்ந்தும் கடனுக்கு மேல் கடன் சுமையை அதிகரிப்பதாகவும் சஜித் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment