நேற்றைய தினம் நாட்டில் 226 புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். பண்டிகைக் காலத்தில் சுகாதார நடைமுறைகளை மக்கள் அலட்சியப்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படும் நிலையில் தினசரி கணிசமான புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்டு வருகிறது.
இதில் 41 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் எனவும் 10 பேர் சிறைச்சாலை கொத்தனியைச் சேர்ந்தவர்கள் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3092 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment