தாதியரை அடைத்து வைத்த வைத்தியசாலை ஊழியர் கைது - sonakar.com

Post Top Ad

Monday 22 March 2021

தாதியரை அடைத்து வைத்த வைத்தியசாலை ஊழியர் கைது

 


மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் பணி புரியும் இரு தாதியரை பலவந்தமாக அறையொன்றில் அடைத்து வைத்திருந்த சம்பவத்தின் பின்னணியில் அதே வைத்தியசாலையில் பணி புரியும் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.


இரு ஊழியர்கள் இணைந்தே இவ்வாறு குறித்த தாதியறை அறையொன்றுக்குள் சுமார் ஒரு மணி நேரம் அடைத்து வைத்திருந்ததாகவும் பொலிசில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் பின்னணியில் சம்பந்தப்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


இன்றைய தினம் குறித்த நபரை நீதிமன்றில் ஒப்படைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment