மாடறுப்பு தடையை துரிதப்படுத்த நடவடிக்கை - sonakar.com

Post Top Ad

Wednesday 31 March 2021

மாடறுப்பு தடையை துரிதப்படுத்த நடவடிக்கை

 


இலங்கையில் மாடறுப்புக்கான தடையை அமுலுக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


கடந்த வருடம் செப்டம்பர் மாதம், பிரதமர் மஹிந்த ராஜபக்சவினால் முன் மொழியப்பட்டிருந்த மாடறுப்புத் தடைக்கு அமைச்சரவை அங்கீகாரமளித்திருந்தது. இந்நிலையில், தற்போது அதனைத் துரிதப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.


பசுக்கள் மற்றும் கன்றுக்குட்டிகளும் இறைச்சிக்காக அறுக்கப்படுவதாகவும் இதனால் விவசாயிகளுக்கு பொருளாதார இழப்புகள் ஏற்படுவதாகவும், அதன் பின்னணியிலேயே இவ்வாறான 'பாதுகாப்பு' சட்டம் தேவைப்படுவதாகவும் அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளதுடன் வயதான மாடுகளை ஏற்றுமதி செய்வதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment