2015ல் தடை நீக்கப்பட்ட அமைப்புகள் உட்பட சில தமிழ் அமைப்புகளை இலங்கையில் தடை செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், அவுஸ்திரேலியா உட்பட்ட நாடுகளில் இயங்கும் உலக தமிழர் அமைப்பு, அவுஸ்திரேலிய, கனேடிய தமிழ் காங்கிரஸ்கள் மற்றும் முக்கிய தமிழ் அமைப்புகள் சிலவே இவ்வாறு தடை செய்யப்பட்டுள்ளதுடன் இவ்வமைப்புகளுடன் தொடர்பு பட்டு இயங்கக் கூடியவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கையெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2015 ஆட்சி மாற்றத்தின் பின் நல்லிணக்க நடவடிக்கைகள் பிரகாரம் சில அமைப்புகளுக்கு எதிரான தடைகள் நீக்கப்பட்டிருந்த அதேவேளை நடைடுறை அரசு இவ்வமைப்புகள் தொடர்ந்தும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக கருதி தடை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment