ஈஸ்டர் தாக்குதல்தாரிகளின் தந்தையான இப்ராஹிம் தொடர்பில் ஜே.வி.பி தலைவர் அநுர குமார திசாநாயக்க விசாரிக்கப்படவுள்ளதாக தான் தெரிவித்ததையடுத்து அநுர பயந்து போயிருப்பதாக தெரிவிக்கிறார் அமைச்சர் சரத் வீரசேகர.
இப்ராஹிம் என அறியப்படும் குறித்த நபர் ஜே.வி.பி தேசியப்பட்டியலில் இணைக்கப்பட்டிருந்தமை தொடர்பில் விளக்கமளிக்கவே அழைக்கப்பட்டதாகவும் எனினும் அநுர குமார பயந்து போயிருப்பதாகவும் சரத் வீரசேகர விளக்கமளித்துள்ளார்.
இதேவேளை, அண்மையில் ஜே.வி.பி உருவாக்கிய அரசியல் கூட்டணியில் ஜமாத்தே இஸ்லாமி அமைப்பு அங்கம் வகிப்பது குறித்தும் ஆராயப்பட வேண்டியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment